Homeஉள்நாடுசாட்சி வழங்க அஞ்சியவர்கள் சாட்சி வழங்க ஆரம்பித்துள்ளனர்...!

சாட்சி வழங்க அஞ்சியவர்கள் சாட்சி வழங்க ஆரம்பித்துள்ளனர்…!

”  மிக முக்கிய விசாரணை சம்பவம் தொடர்பில் இதுவரை மௌனம் காத்துவந்தவர்கள் தற்போது வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர்: சாட்சி வழங்குவதற்கு அச்சப்பட்டவர்களும் சாட்சி வழங்கிவருகின்றனர். எனவே, விசாரணைகளை மிகவும் சூட்சுமமாக நடத்த வேண்டியுள்ளது.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டிய குழுவின் பெயர் விபரம், ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கடந்த 30 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

எனவே, உயிர்த்த ஞாயிறுக்கு முன்னதாக மேற்படி தகவல்களை ஜனாதிபதி வெளியிடுவார் என முழு நாடும் எதிர்பார்த்தக்கொண்டிருந்த நிலையிலேயே, பதுளையில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போது, தற்போதே தகவல்களை வெளியிட முடியாது என்ற தொனியில் ஜனாதிபதி உரையாற்றினார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
‘ முழு நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சம்பவம் (உயிர்த்த ஞாயிறு தாக்குதல்)தொடர்பான விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

விசாரணையின் அடுத்தக்கட்டத்தை மிகவும் அவதானத்துடனும், சூட்சுமமாகவும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனவே, சில விடயங்களை உங்களால் தற்போதே அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விசாரணைகள் சிறப்பாக இடம்பெறுகின்றன என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு வழங்க முடியும். இதுவரை வாய் திறக்காதவர்கள், வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர். சாட்சி வழங்குவதற்கு அச்சப்பட்டவர்கள், சாட்சி வழங்கிவருகின்றனர்.

தொடர்பு இல்லை எனக் கூறியவர்களின் தொடர்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன. எனவே, விசாரணை சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது. குற்றங்களை காலத்தால் மூடிமறைக்க இடமளிக்கமாட்டோம். உரிய வகையில் நீதி நிலைநாட்டப்படும்.” – என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் என ஜனாதிபதி வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், அதனை மையப்படுத்தியதாகவே மேற்படி கருத்துகளை வெளியிட்டார் என்பதை அறியமுடிகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular