Homeஉலகம்அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற திட்டம்

அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற திட்டம்

அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 3 லட்சத்து 31 ஆயிரம் பேர் இந்திய மாணவர்களாவர்.

கனடா, வியட்நாம், தைவான், சவுதி அரேபியா, பிரேசில், மெக்ஸிகோ நாடுகளை சேர்ந்த மாணவர்களும் அமெரிக்காவில் கணிசமாக உள்ளனர்.

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர அந்த நாட்டு அரசு சார்பில் எப் 1 விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர், விருப்ப பயிற்சி திட்டத்தில் இணைந்து அமெரிக்காவில் பணியாற்ற முடியும்.

அதாவது இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் ஓபிடி திட்டத்தில் ஏதாவது ஓர் அமெரிக்க நிறுவனத்தில் ஓராண்டு வரை பணியாற்றலாம். அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள், அமெரிக்க நிறுவனங்களில் 3 ஆண்டுகள் வரை பணியாற்றலாம்.

ஓபிடி திட்டத்தின் மூலம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் ஓபிடி திட்டத்தை ரத்து செய்யும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கு ‘நேர்மையான உயர் திறன் அமெரிக்க சட்டம் 2025’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை, வெளிநாட்டினர் பறிப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் கருதுகிறார். இதன்காரணமாக புதிய மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்தியாவை சேர்ந்த சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவி, மாணவியர் அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular