எனது தந்தை திருடன் அல்லர் என்பதை இந்த அரசாங்கத்தால் மட்டுமே என்பதை நிரூபிக்க முடியாது. அதற்காக எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் சிஐடிக்கு வந்து, விசாரணைகளை எதிர்கொள்ள தயார். ஒருபோதும் திணறப்போவதில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
சிஐடியி விசாரணை நேற்று முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வழமையாக ஏழு, எட்டு மணிநேரம் வைத்து விசாரிப்பாளர்கள், இன்று குறுகிய காலப்பகுதிக்குள் விசாரணை முடிந்துவிட்டது. தேர்தல் காலம் என்பதால் அரசாங்கம் தற்போது திணறிவருகின்றது. எம்மை அவ்வளவு எளிதில் திணற வைக்க முடியாது.
தேர்தல் காலமாக இருந்தாலும் நாம் விசாரணைக்கு வருவோம். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
பயங்கரவாதிகளை இல்லாதொழித்து இந்நாட்டை எனது தந்தை கட்டியெழுப்பினார். அப்படிபட்டவருக்கு கள்வர் என முத்திரை குத்தினார்கள். எனவே, இந்த ஆட்சியின்கீழ்தான் கள்வர் என்ற அந்த முத்திரையையும் நீக்கிக்கொள்ள முடியும். அதை செய்வதற்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் நான் இங்குவருவேன்.” – என்றார்.
