Homeஉள்நாடுகுடிபோதையில் லயன் குடியிருப்புக்கு தீ வைத்தவர் கைது!

குடிபோதையில் லயன் குடியிருப்புக்கு தீ வைத்தவர் கைது!

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்சீ தோட்டத்தில் லயன் குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றிரவு (7) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த லயன் குடியிருப்பில் வசிக்கும் 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 9 மணியளவில் குடிபோதையில் தனது வீட்டிற்கு வந்த சந்தேகநபர், தனது வீட்டிற்கு தீ வைத்து எரித்ததாகவும், தீ அருகில் இருந்த இரண்டு வீடுகளுக்கும் பரவியதாகவும், அதில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற எல்ல பொலிஸார், மின்சார சபை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடன் சம்பவ இடத்திற்கு வந்த பண்டாரவளை மாநகர தீயணைப்பு பிரிவினர் தீயை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் அமரசிங்கவின் ஆலோசனையின் பேரில், எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி .பிரபோப உபேந்திர அபேகுணவர்தன மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular