Homeஉள்நாடுஒற்றை கண் பார்வை இழந்த சிறுத்தையின் படம் வழங்கப்பட்டது ஏன்?

ஒற்றை கண் பார்வை இழந்த சிறுத்தையின் படம் வழங்கப்பட்டது ஏன்?

வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த “ஐ-ஒன்” (eye-one) என அழைக்கப்படும் பெண் சிறுத்தையின் இந்த சிறப்பு புகைப்படத்தை, 2025 ஏப்ரல் 5ஆம் திகதி , இந்திய பிரதமர்  நரேந்திர மோடி அவர்களுக்கு கொழும்பில் வழங்குவது பெரும் கௌரவமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த சிறப்பான விலங்கு — இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையான சின்னமாகும்.
 அதன் கவர்ச்சிகரமான நீல கண் சவால்களை எதிர்கொண்டு அதன் வாழ்க்கை பற்றிய நீண்ட கதையை சொல்கிறது — ஒருவேளை குளுகோமா (glaucoma), கெடரெக் (cataract), அல்லது ஏதாவது விபத்து காரணமாக ஏற்பட்ட நிலை — ஆனால் அது காட்டில் பாதுகாப்பாக உறுதியாக இருப்பது விலங்குலகின் சவால்களை வெற்றிகொள்வதற்கான சின்னமாகும்.
எவ்வாறாயினும், துரதிருஷ்டவசமாக இந்த சிறப்பு விலங்கு கடந்த சில ஆண்டுகளாக காணப்படவில்லை, மேலும் அது உயிருடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular