Homeஉலகம்மியன்மாரில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!

மியன்மாரில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மியன்மாரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,003 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 4500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், தாய்லாந்தில் நிலநடுக்கத்தில் மாயமான 100-க்கும் அதிகமானோரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular