Homeஉள்நாடுபுதிய அரசியலமைப்பு எப்போது இயற்றப்படும்? நீதி அமைச்சர் கூறுவது என்ன?

புதிய அரசியலமைப்பு எப்போது இயற்றப்படும்? நீதி அமைச்சர் கூறுவது என்ன?

” புதிய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்குரிய கால எல்லையை என்னால் சரியாக குறிப்பிட முடியாது. ஆனால் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இதற்குரிய பணி நிச்சயம் நிறைவேறும்.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” எல்லா விடயங்களையும் ஆறு மாத காலத்துக்குள் செய்ய முடியாது. அதனால்தான் ஐந்தாண்டுகள் ஆணை வழங்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணியை ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டியதில்லை. நல்லாட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட வரைவு நகல் உள்ளது. மேலும் பல அறிக்கைகளும் உள்ளன.” எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

கால எல்லை பற்றி கேட்டால் என்னால் பதில் வழங்க முடியாது. ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட புதிய அரசியலமைப்பு ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் கொண்டுவரப்படும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும். குறித்த முறைமையை தக்க வைப்பது தொடர்பில் எவ்வித பேச்சும் எமது தரப்பில் நடக்கவில்லை.” – எனவும் நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular