பெற்றோல் விலை குறைப்பு: டீசல் விலையில் மாற்றம் இல்லை!
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய 309 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 299 ரூபா.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலையும் 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபா.
டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது
