Homeஉலகம்அமெரிக்காவுடனான ஆழமான உறவு முடிவுக்கு வந்துவிட்டது: கனடா பிரதமர்

அமெரிக்காவுடனான ஆழமான உறவு முடிவுக்கு வந்துவிட்டது: கனடா பிரதமர்

அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையிலான ஆழமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற ட்ரம்பின் அறிவிப்பு உலக சந்தையில் வர்த்தகப் போர் ஏற்படும் சூழலை உருவாக்கி இருக்கிறது.
கார்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதை கண்டித்து பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே கனடா பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

” நமது பொருளாதாரங்களின் ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் இறுக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பின் அடிப்படையில் அமெரிக்காவுடன் நாங்கள் கொண்டிருந்த பழைய உறவு முடிந்துவிட்டது.

சமீபத்திய வரி நடவடிக்கைகளுக்கு எங்கள் பதில் போராடுவது, பாதுகாப்பது, கட்டியெழுப்புவது போன்றவையாகும்.” எனவும் மார்க் கார்னி கூறினார்.

” அமெரிக்காவில் அதிகபட்ச தாக்கத்தையும் கனடாவில் குறைந்தபட்ச தாக்கங்களையும் ஏற்படுத்தும் வர்த்தக நடவடிக்கைகளுடன் நாங்கள் அமெரிக்க வரிகளை எதிர்த்துப் போராடுவோம்.” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular