Homeஉள்நாடுவவுனியாவில் கிணற்றில் இருந்து யுவதியின் சடலம் மீட்பு

வவுனியாவில் கிணற்றில் இருந்து யுவதியின் சடலம் மீட்பு

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், பெண்ணைச் சடலமாக மீட்டனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி க.கரிபிரசாத் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular