Homeஉள்நாடுஐஸ் போதைப்பொருளுடன் லுணுகலையில் இளைஞன் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் லுணுகலையில் இளைஞன் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர், இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகலை, பாக்கு தோட்டத்தை 32 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய லுணுகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பிரகாரம், லுணுகலை பொலிஸ் குழு ஒன்று குறித்த பகுதிக்கு சென்று, சந்தேக நபரின் வீட்டை சோதனைக்குட்படுத்தியது.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் மனைவி தொழில் நிமித்தம் வெளியூர் சென்று உள்ளதாகவும் 9 வயதுடைய சிறுவனுடன் குறித்த சந்தேக நபர் வாழ்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நாளைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

 

 

ராமு தனராஜா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular