Homeஉள்நாடுபொலிஸ்மா அதிபர் தேசபந்துவை பதவி நீக்க முழுமையான ஆதரவு!

பொலிஸ்மா அதிபர் தேசபந்துவை பதவி நீக்க முழுமையான ஆதரவு!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியும் தமது பூரண ஆதரவை வழங்கும் என்று என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தி தான் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக பிரேரணையை கொண்டு வந்தது. அன்று அரசியலமைப்பு பேரவையில் அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியே வாக்களித்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பை மீறியே தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். எனவே, முன்னாள் ஜனாதிபதியைப் போலவே சபாநாயகரும் பொறுப்புக் கூற வேண்டும். அரசியலமைப்பு பேரவையில் நடந்தவற்றை முற்றிலுமாகத் திரிவுபடுத்தி, மீயுயர் சட்டத்தை அப்பட்டமாக மீறிய வகையிலயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

எதிர்வரும் உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று (25) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular