Homeஉள்நாடுபாதீடுமீதான இறுதி வாக்கெடுப்பு இன்று!

பாதீடுமீதான இறுதி வாக்கெடுப்பு இன்று!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (21) நடைபெறவுள்ளது.

2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற ரீதியில ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவால் கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது.

இரண்டாவது வாசிப்புமீதூன வாக்கெடுப்பின்போது 109 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றப்பட்டது.

வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்பின்னர் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் நாளை 21ஆம் நடைபெறவுள்ளது.
இதற்கமைய நாளை மாலை 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular