2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் 97,322 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 590,300 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 93,951 ஆகும்.
மேலும், ரஷ்யாவிலிருந்து 77,608 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 56,103 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 41,366 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 33,335 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 35,197 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 21,918 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
