Homeஉள்நாடுபோதைப்பொருளுடன் கனடா யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

போதைப்பொருளுடன் கனடா யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

கனேடிய யுவதியொருவர், ஹஷீஷ் போதைப்பொருளுடன் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 20 வயது யுவதி கனேடிய இளங்கலை பட்டம் பெறவிருக்கும் மாணவி என்பதோடு, இவர் இலங்கைக்கு வருகைதரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அவர் கனடாவின் டொராண்டோவிலிருந்து இந்த போதைப்பொருளுடன் அபுதாபிக்கு வந்திருந்தார். அங்கிருந்து, இரவு 8.35 மணிக்கு எதிஹாட் எயார்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 3 போர்வைகளில் சுற்றப்பட்ட 17 கிலோகிராம் 573 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular