Homeஉள்நாடுஉள்ளாட்சி தேர்தலில் தனிவழி செல்கிறது தமிழரசுக் கட்சி!

உள்ளாட்சி தேர்தலில் தனிவழி செல்கிறது தமிழரசுக் கட்சி!

உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பில் கட்சியின் மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

” மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை நாங்கள் போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி வாகை சூடலாம் என்று நம்பிக்கையோடு எங்களுடைய உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

வருகின்ற வாரத்துக்குள் நாங்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விடுவதாகத் தீர்மானித்திருக்கின்றோம்.” எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட வேண்டாம் என்று கூட்டத்தின்போது அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அந்த முயற்சி முடிவடைந்துவிட்டது என்பதுதான் என்னுடைய கருத்து.

எங்களுடைய கட்சியின் பதில் தலைவர் அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்திருந்தார். ஆனால், எங்களுடன் பங்காளிகளாக இருந்த கட்சிகள் தாங்கள் வேறு ஒரு கூட்டணியாக இணைந்து இருக்கின்றோம் என்று எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள். ஆகையினால் ஓர் அணியாக ஒன்று சேர்ந்து போட்டியிடுவது என்பது இப்போது முடியாத விடயம். தமிழரசுக் கட்சி தனி அணியாகப் போட்டியிடும்.” எனவும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை தேர்தலுக்குப் பின்னர் நிர்வாகங்களை அமைக்கின்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிகளுடன் இணைந்துதான் நிர்வாகத்தை அமைக்க வேண்டியதாக இருக்கும். எனவே, அது குறித்து தொடர்ச்சியாகப் பல கட்சிகளோடும் பேச்சு நடத்திவருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular