Homeஉள்நாடுஇபோச பஸ்களில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி இழைக்காதீர்! திகா உடனடி நடவடிக்கை!!

இபோச பஸ்களில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி இழைக்காதீர்! திகா உடனடி நடவடிக்கை!!

கினிகத்தேன கடவளை தமிழ் பாடசாலை மாணவர்கள் இபோச பஸ்ஸிலிருந்து அதன் நடத்துனரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் இபோசவின் ஹட்டன் டிப்போ பிரதானிக்கு அழைப்பை ஏற்படுத்திய திகாம்பரம், குறித்த நடத்துனருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

அதேபோல நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு இவ்வாறு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகின்றது எனவும், பருவகால சீட்டில் பயணிக்கும் மாணவர்கள் நடத்துனர்களால் அநாகரீகமாக நடத்தப்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான செயல்பாடுகளுக்கு இடமளிக்கவேண்டாம் எனவும் திகாம்பரம் வலியுறுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சருடனும் பேச்சு நடத்தவுள்ளதாகவும் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ நிருபர் சதீஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular