Homeஉள்நாடுயாழில் 200 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்!

யாழில் 200 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்!

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்பின் போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த தேடுதலின்போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123 கிலோ கேரள கஞ்சா முதலில் கைப்பற்றப்பட்டன. மொத்தமாக 200 கிலோ கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular