மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை ரயில் நிலையத்திற்கும் ஹாலி எல ரயில் நிலையத்திற்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையகத்திற்கான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கொழும்பிலிருந்து பதுளைக்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் ஒருகொடவத்தைக்கும் இடையில் உள்ள புளுமென்டால் ரயில் கடவையில் திருத்த வேலை இடம்பெறுவதன் காரணமாக இன்று சனிக்கிழமை (01) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குறித்த பகுதி மூடப்பட்டிருக்கும் என புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
