Homeஉள்நாடுவருட இறுதியில் மாகாண தேர்தல்!

வருட இறுதியில் மாகாண தேர்தல்!

மாகாணசபைத் தேர்தலும் வெகுவிரைவில் நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் ஆரம்பத்தில் மேற்படி தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், உள்ளாட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயார் நிலையிலேயே உள்ளது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular