Homeஉள்நாடுபதுளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

பதுளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று இரவு (25) நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

24 வயதுடைய சுவினிதகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு பதுளை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பதுளை நகரில் சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்தியள்ளனர்.

இதன்போது சூட்சுமமான முறையில் தன் கைவசம் மறைத்து வைத்திருந்த 5400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பதுளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

ராமு தனராஜா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular