Homeஉள்நாடுஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்!

ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளாரென இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டவர்களும் பிரதமருடன் கொழும்பு வருவார்கள் என தெரியவருகின்றது.

உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு முன்னதாக கொழும்பு வரும் பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த் தேசிய தலைவர்களுடன் சந்திப்பை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானத் திறப்பு விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக டில்லி சென்றிருந்தார். இதன்போது இலங்கை வருமாறு இந்திய பிரதமருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular