Homeஉள்ளூர்ஹபராதுவ பகுதியில் இரண்டு துப்பாக்கிகளுடன் பெண்ணொருவர் கைது!

ஹபராதுவ பகுதியில் இரண்டு துப்பாக்கிகளுடன் பெண்ணொருவர் கைது!

ஹபராதுவ பொலிஸ் பிரிவின் வெல்லேகேவத்த பகுதியில் வீடொன்றில் இருந்து ரிவால்வர் ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும்  வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லேகேவத்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கி ஒன்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கி ஒன்றும், 02 பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் 02 வாள்கள் பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular