Homeஉள்நாடுவிசாரணைகளை சீர்குலைக்க சில குழுக்கள் முயற்சி!

விசாரணைகளை சீர்குலைக்க சில குழுக்கள் முயற்சி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான மீள் விசாரணை மற்றும் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலை, கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை சீர்குலைத்து, நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்துவதற்கு சில குழுக்கள் முயற்சிப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ பாதாள குழுக்களை ஒடுக்குவதற்குரிய செயல்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றுவரும் நிலையில், சில சந்தர்ப்பங்களில் அவற்றுக்கு தடங்கள் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் குழுக்கள் தொடர்பிலும், நபர்கள் சம்பந்தமாகவும் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் இருப்பதானது, சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் சில மோசடியான அரசியல் குழுக்களில்தான் தங்கியுள்ளது.

அதேபோல கடந்தகாலங்களில் இடம்பெற் றகடத்தல், கொலை, தாக்குதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன.

சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு வழக்கு தொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
அதேபோல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மீள் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. வெளிவராத பக்கங்கள் பற்றியும் விசாரணை தொடர்கின்றது.

இப்படியான விசாரணைகளை ளஒடுக்குதற்கும், நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்துவதற்கும் சிற்சில குழுக்கள் செயல்படுகின்றன என்று புலனாய்வு தகவல் கிடைத்தள்ளது.
இது தொடர்பிலும் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. நபர்களையும் அடையாளம் கண்டுள்ளோம். எதிர்காலத்தில் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular