Homeஉள்நாடுமக்கள் ஆணைக்கு எதிரான பாதீடே இது: சஜித் விளாசல்

மக்கள் ஆணைக்கு எதிரான பாதீடே இது: சஜித் விளாசல்

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வளமான நாடு , அழகான வாழ்க்கை முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் இதில் அமைந்துள்ளனவா என பார்க்கும் போது இந்த வரவுசெலவுத் திட்டம் வாக்குறுதியளித்தபடி கிடைத்த மக்கள் ஆணைக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றும் போதே போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.

ஐஎம்எப் இணக்கப்பாடும், சர்வதேச பிணைமுறி பத்திரதாரர்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள இணைக்கப்பாடுகள் மிகவும் பாதகமான ஒப்பந்தங்களாகும்.

ஐஎம்எப் வேலைத்திட்டத்தில் இருந்து பின்வாங்காது, மக்கள் சார், மக்களின் பக்கத்திலிருந்து சிந்தித்து மனிதாபிமான புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் இந்த வரம்புகள் காரணமாக, புறநிலைகள் தொடர்பான திருத்தங்களைச் செய்ய முடியாது சமூக இடைவெளி ஏற்பட்டுள்ளது. பொதுப் பண்டங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தாலும், இந்தக் கட்டுப்பாடுகளினால் அதுவும் தடைப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய கட்டுப்பாடுகள் ஒரு நாட்டின் வளர்ச்சியில் பாரபட்சமான எதிர்மறை விளைவை ஏற்படுத்தும், அரசாங்கம் இதையெல்லாம் மறந்து விட்டு செயல்படுவது வெளிப்படை. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்காப்பாட்டை திருத்துவோம் என தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளித்தாலும், அவற்றை மறந்து பெற்ற மக்கள் ஆணையைப் முழுமையாகக் காட்டிக் கொடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular