Homeஉள்நாடு22 வயது இளைஞன் குத்திக்கொலை: கொட்டாஞ்சேனையில் பயங்கரம்!

22 வயது இளைஞன் குத்திக்கொலை: கொட்டாஞ்சேனையில் பயங்கரம்!

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளூமெண்டல் ரயில் மார்க்க பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் புளூமெண்டல் ரயில் மார்க்கத்திற்கு அருகில் வந்தபோது, சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபர் அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துள்ளார்.

இதன்போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த கொலை சம்மபவத்திற்கான காரணம் மற்றும் கொலையாளிகள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular