Homeஉள்நாடுசிறுபான்மையின மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் அரசமைப்பை கொண்டுவருவோம்!

சிறுபான்மையின மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் அரசமைப்பை கொண்டுவருவோம்!

” சமஷ்டியா, ஒற்றையாட்சியா என பெயரில் தொங்கிக்கொண்டிருக்காமல், சிறுபான்மையின மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கின்ற அரசியலமைப்பையே கொண்டுவரவுள்ளோம்.” என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

சமஷ்டி தீர்வு பற்றி எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சமஷ்டிக் கோரிக்கை என்பது நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. சமஷ்டியா, ஒற்றையாட்சியா அல்லது ஐக்கிய இலங்கையா என்ற வார்த்தைகளுக்குள் தங்கி இருக்க நாம் முற்படவில்லை.

நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற குறிப்பாக சிறுபான்மையின மக்களின தனித்துவத்தை அங்கீகரிக்கின்ற அரசமைப்பையே கொண்டுவரவுள்ளோம்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular