Homeஉள்நாடுஅரசின் முயற்சி கைகூடாது!

அரசின் முயற்சி கைகூடாது!

” சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அழுத்தம் பிரயோகித்து அதனை கையகப்படுத்துவதற்குரிய அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிக்காது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை என்பன சுயாதீனமாக இயங்க வேண்டும். இவற்றில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது.

எனினும், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அழுத்தம் பிரயோகித்து தமக்கு தேவையானவற்றை செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் எவ்வளவு முயற்சித்தாலும் அதனை எமது நாட்டில் செய்ய முடியாது.

அதேபோல சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரத்தை அரசியல் அதிகாரசையொன்றின்கீழ் கொண்டுவருவதற்குரிய முயற்சியும் இடம்பெறுகின்றது. இதுவும் வெற்றியளிக்காது.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular