Homeஉள்நாடுஇழப்பீடு பெற்றுள்ள முன்னாள் எம்.பிக்களின் சொத்துகள் தொடர்பில் விசாரணை!

இழப்பீடு பெற்றுள்ள முன்னாள் எம்.பிக்களின் சொத்துகள் தொடர்பில் விசாரணை!

இழப்பீடு பெற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் சொத்துகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பிறகு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” இழப்பீடு பெற்றுள்ள அரசியல்வாதிகளுள் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியர்களின் பெயர் பட்டியலை மட்டுமே தற்போது வெளியிட்டுள்ளோம். பிரதேச அரசியல்வாதிகளின் பெயர்களும் உள்ளன. அதுவும் வெளியிடப்படும்.

அதிகாரிகளை மிரட்டி ,இருக்கின்ற சொத்துகளைவிடவும் இழப்பீடு பெறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விவரங்களை வெளியிட்டிருக்க வேண்டும். எனவே, அது பற்றி நிச்சயம் விசாரணை நடத்தப்படும்.
சிஐடியினர் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை குழு என்பனவும் இது பற்றி விசாரணை நடத்தும் என நம்புகின்றோம்.

களவாடப்பட்ட சொத்துகளை மீள பெறுவதற்கும், முறைகேடாக இழப்பீடு பெற்றிருந்தால் அதனை மீளபெறுவதற்கும் சட்ட திருத்தங்கள் அவசியமெனில் அதனை செய்வதற்கும் தயாராகவே இருக்கின்றோம்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular