Homeஉள்நாடுயாழ். இளைஞனுக்கு எமனாக மாறிய போதை!

யாழ். இளைஞனுக்கு எமனாக மாறிய போதை!

அதீத போதைப் பொருள் பாவனையால் சுகவீனமுற்ற இளைஞன் ஒருவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டவர் ஆவார்.

சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே , அதீத போதை காரணமாக சுகவீனமடைந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular