Homeஉள்நாடுநேரடி சந்திப்புக்கு ஏற்பாடு: பொது சின்னம் குறித்து ஆராய்வு!

நேரடி சந்திப்புக்கு ஏற்பாடு: பொது சின்னம் குறித்து ஆராய்வு!

உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இரு தரப்பும் இணைவதற்குரிய மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணவின் வீட்டில் நடைபெற்றது.

இரு கட்சியினதும் செயலாளர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு கூறியுள்ளார்.

” பேச்சு வார்த்தை சாதகமாக நடைபெறுகின்றது. ஒன்றாக நாம் தேர்தலில் களமிறங்குவோம். சின்னம் தொடர்பில் இன்னும் முடிவு இல்லை. சிறிகொத்தவா அல்லது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகமா என்பது முக்கியம் அல்ல, இரு தரப்பு இணைவு என்பதுதான் முக்கியம். இரு தரப்பும் இணைவதற்குரிய சாத்தியம் பிரகாசமாகவே உள்ளது.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை. இணைவு குறித்து சஜித், ரணில் ஆகியோர் சாதகமான நிலைப்பாட்டில் உள்ளனர். இருவரும் விரைவில் சந்திப்பார்கள்.”- என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular