follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொட்டிகாவத்தை – முல்லேரியா பகுதியில் இன்று காலை துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரவுநேர பயணக்கட்டுப்பாடு நீக்கம்

இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு இன்று நள்ளிரவுடன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 29 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (24) 29 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,640 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை

அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் அறிமுகப்படுத்தத் நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைக்கான அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, கொரோனா பரவல் காரணமாக எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்...

நெனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதிக்கு எதிராக சீ.ஐ.டியில் முறைப்பாடு

இந்தியாவிலிருந்து திரவ உர இறக்குமதியின் போது, தனியார் நிறுவனமொன்றுக்கு பணம் செலுத்திய விடயம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்ற விசாரணை திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்றை முன்வைத்தனர். இந்தியாவிலிருந்து...

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதி கொழும்பு – கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிபர், ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சிங்கப்பூர் விதித்த பயணத்தடை நீக்கம்

இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு, சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடையை விதித்திருந்தமை...

Latest news

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...