முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தன்னோடு நெருங்கிய தொடர்பை பேணிய அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும்...
ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை மற்றும் பிராந்திய அலுவலகங்களால் வழங்கப்படும் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு...
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்கள் காரணமாக நீண்ட நாட்களாக கஷ்டப்படுபவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்துமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
அவரது பணிக்குழாமினர் சிலருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து அவர் தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டார்.
இதற்கமையை, மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின்போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அவசர கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை (16) கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
தற்போதைய கொரோனா நிலைமையில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில்...
தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடுமையாக முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு...