கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
நாட்டின் 24 மாவட்டங்களிலுள்ள 212 மத்திய நிலையங்களில் இன்று (18) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில்,...
அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள் இரு தினங்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இன்று(17) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய இன்று (17) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான ஒருநாள், டி20 தொடர் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை தொடர்ந்து தொடரை இரத்து செய்து நியூசிலாந்து அணி நாடு திரும்புகிறது.
பாகிஸ்தான் சென்றுள்ள...
ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய மனைவி மற்றும் மாமனார் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்...
15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுகாதார தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல், அரசு மற்றும் தனியார் அனைத்து ஊழியர்களுக்கும் ' தடுப்பூசிச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இத்தாலியை "பாதுகாப்பு நிலையில்" வைத்திருக்கும் நடவடிக்கையாக இத்தாலியப் பிரதமர் இதனை அறிவித்துள்ளார்.
“green...
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வௌ்ளிக்கிழமை அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.