தற்போது உலகளவில் உருவாகியுள்ள கொவிட் நெருக்கடியைவிட எதிர்வரும் காலங்களில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என, ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் எச்சரித்துள்ளார்.
பெருந்தொற்றால்...
கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில், குண்டொன்றை வெட்டுவதற்கு முற்பட்ட போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது 13 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கையில் நேற்றைய தினம் 21 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,461 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்றைய தினம்(05) நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் மின்வெட்டு தடைபடாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாளை(06) மற்றும் நாளை மறுதினங்களில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடிய...
தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 03ஆம் திகதி பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம்...
உலகளவில் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தொற்று...
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 7ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
‘கெசல்வத்தை ஃபவாஸ்’ என்ற நபர் நேற்றிரவு(04) வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வாழைத்தோட்டம் ஓல்ட் யோர்க் வீதியில் காரில் வந்த குழுவொன்று குறித்த நபரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது...