follow the truth

follow the truth

October, 16, 2024
HomeTOP2ஹத்துருசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்

ஹத்துருசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்

Published on

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹதுருசிங்கவின் சேவையை ஒழுக்காற்று காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் உடனடியாக இடைநிறுத்தியுள்ளனர்.

அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரது சேவை நிறைவுபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் 2025 சாம்பியன்ஸ் டிராபி வரை இடைக்கால பயிற்சியாளராக இருப்பார்.

கடந்த பெப்ரவரியில், பங்களாதேஷின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளராக ஹத்துருசிங்க இரண்டாவது முறையாக அணியில் இணைந்தார்.

ஆனால் முன்னாள் தலைவர்கள் மற்றும் நாட்டின் தற்போதைய கிரிக்கெட் தலைவர் பாரூக் அஹமட் ஆகியோர் ஹத்துருசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உபுல் தரங்கவுக்கு எதிரான பிடியாணைக்கு இடைக்காலத் தடை

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர்...

தோழர் நாமல் பொஹொட்டுவவின் வாக்குகளை மூன்று இலட்சமாக குறைத்தார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குகளை அறுபத்தொன்பது இலட்சத்தில் இருந்து மூன்று இலட்சமாக குறைத்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர்...

இந்திய விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

சிங்கப்பூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்த "Air India Express" விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகச் செய்தி வந்ததை அடுத்து பாதுகாப்பு...