follow the truth

follow the truth

October, 14, 2024
HomeTOP1யானை சின்னத்தின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடல்

யானை சின்னத்தின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடல்

Published on

2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிப்பதற்கு முன்பதாக கொட்கலை CLF வளாக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (13) கலந்துரையாலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இ.தொ.கா முக்கியஸ்த்தர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், தோட்டக்கமிட்டி ,மாவட்டத் தலைவர்கள், தலைவிமார்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின் போது எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டனர்.

2024 பாராளுன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், தேசிய தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை மாணவியிடமிருந்து பிரதமருக்கு கிடைத்த மகஜர்

காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல்...

பாடசாலைகளின் விடுமுறை குறித்து விசேட அறிவிப்பு

கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்...

“வெள்ளத்தை கட்டுப்படுத்த நிலையான தீர்வு தேவை”

இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள நிலைமை ஏற்பட்டதாகவும், அதனால் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு குறிப்பிட்ட மற்றும் நிலையான...