follow the truth

follow the truth

October, 14, 2024
HomeTOP2ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்த்ததாக மக்கள் போராட்டக் முன்னணி குற்றச்சாட்டு

ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்த்ததாக மக்கள் போராட்டக் முன்னணி குற்றச்சாட்டு

Published on

புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டமை பழைய அரசியல் கலாசாரத்தையே பிரதிபலிப்பதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பத்திரப்பதிவு, ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட 7 சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்தும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் மக்கள் போராட்டக் முன்னணியின் செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்ட முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே கூறியதாவது;

“.. புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ஓய்வுபெற்ற ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நல்லவரா இல்லையா என்பதோ, அவருடைய முந்தைய பணிகளோ அதெல்லாம் இப்போதைக்கு உரிய காரணம் அல்ல.. ஆனால் அரசியல் கலாசார விவகாரத்தில் மீண்டும் ஒரு பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. அதுதான் அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் மேடைகளில் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இணையாக பிரச்சாரம் செய்தவர்.

எனவே அந்த நபர் ஓய்வு பெற்ற அதிகாரி. அந்த அதிகாரி புதிய அரசால் மீண்டும் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது அரசியல் கலாசாரம் இல்லை இதையே கடந்த தேர்தல்களில் அவர்களும் பிரசார மேடைகளில் அறிவித்தார்கள். மீண்டும் வேறு அரசாங்கம் வந்து தேசபந்து தென்னகோனை மீண்டும் தனது கடமைகளில் இணைத்து அவருக்கு பணிப்பாளர் பதவியை வழங்கினால் அது சரியா? அதே நடைமுறைதான் இப்போதும் நடந்துள்ளது.

அப்போது உங்களுக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகளுக்கு பதவி கொடுப்பதுதான் இதற்குள் உள்ள அரசியல் கலாச்சாரம். அடுத்து, முன்னைய நல்லாட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே, அவசர அவசரமாக பல நிகழ்ச்சிகள் செய்யப்பட்டன. மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என்றனர். பல்வேறு வழிகளில் பலரும் கைது செய்யப்படுகின்றனர் என்றனர். பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.. நாமல் ராஜபக்ச தண்டிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இதெல்லாம் தேர்தல் சமயத்தில் பிரச்சாரமாகவே செய்யப்பட்டது. அதைச் செய்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு அது களத்தில் நிஜமாகவில்லை…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானின் தலைநகரம் லொக்டவுன்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த...

புத்தளத்தில் கூட்டணி அமைக்கவிடாமல் தடுத்தவர் ஹக்கீம், ரிஷாத் – இஷாம் மரிக்கார் காட்டம்

கடந்த பொதுத் தேர்தலில் புத்தளத்தில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு 33 வருடங்களின் பின்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி...

ஈஸ்டர் தாக்குதல் இறுதி அறிக்கைகளை வெளியிட கம்மன்பில தரப்பிலிருந்து அரசுக்கு காலக்கெடு

முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கைகள் இரண்டினையும் ஜனாதிபதி...