மழை காரணமாக புத்தளம் புகையிரத பாதையில் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன.
அதன்படி அந்த பாதையில் லுனுவில வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (12) பிற்பகல் 01:00 மணி முதல் மறு அறிவித்தல் வரை இந்த ரயில் லுனுவில வரை இயக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.