ஒருகொடவத்தை சுங்க களஞ்சியசாலை வளாகத்தில் நேற்று (11) ஆர்சனிக் எனப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த கனரக உலோகம் அடங்கிய டின் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த செமன் டின் மீன் கையிருப்பின் பெறுமதி 215,000 அமெரிக்க டொலர்கள் எனவும், குறித்த செமன் டின் மீன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.