follow the truth

follow the truth

October, 29, 2024
HomeTOP1ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும்

ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும்

Published on

பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பெறுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

அரச நிதியைப் பெற்று மேற்கொள்ளப்படும் பணிகளை ஏற்பாடு செய்யும்போது அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக செயற்படுவது அவசியமானது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் அரச நிறுவனங்களுக்கு மேலும் அறிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபன சபைகள் உள்ளிட்ட சட்டபூர்வ நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதத்தில்

2025ம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல்...

சட்டவிரோத தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் 100 பேர் கைது –

கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் சட்டவிரோத தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் தொடர்பில் 100 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (port...