அமெரிக்காவின் புளோரிடாவை தாக்கிய மில்டன் சூறாவளி காரணமாக இரண்டு மில்லியன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் மில்டன் சூறாவளி 5-ம் நிலையில் இருந்து 3-ம் நிலை புயலாக வலுவிழந்தது. இருப்பினும் அது புளோரிடாவை நெருங்கிய போது மணிக்கு 195 கி.மீ வேகத்தில் காற்று வீசியது என்று அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
சூறாவளி காரணமாக புளோரிடா மாகாணத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.
புளோரிடாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள புனித லூசி கவுன்டியில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.