கண்டி – பாத்தும்பறைத் தொகுதியிலுள்ள மடவளைப் பிரதேசத்தில் விற்கப்படும் பாணின் நிறை குறைவாக இருப்பதாக நுகர்வோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பொதுவாக ஒரு பாணின் நிறை 450 கிராமாக இருக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைத் தெரிவித்த போதும், மடவளை நகரக் கடைகளில் விற்கப்படும் பாண்களின் நிறை 270 கிராம் முதல் 290 கிராம் வரையே காணப்படுகின்து.
80 ரூபாவிற்கு விற்கப்படும் பாணின் நிறை 285 கிராம் காட்டுகிறது
இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.