follow the truth

follow the truth

October, 9, 2024
Homeஉள்நாடுநுவரெலிய தபால் நிலைய கட்டடம் குறித்து அறிவித்தல்

நுவரெலிய தபால் நிலைய கட்டடம் குறித்து அறிவித்தல்

Published on

நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அது இயங்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த கடந்த அரசாங்கத்தின் போது அனுமதி வழங்கப்பட்டதாக தபால் திணைக்களம் அறிவித்திருந்தது.

இதன்படி, அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுமெனவும் தபால் நிலையத்திற்கு மாற்று இடம் வழங்கிய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர முன்னர் கூறியிருந்தார்.

குறித்த போராட்டத்தில் இலங்கை தபால் அதிகாரி சங்கம் , இலங்கை தபால் ஊழியர்கள் சங்கம் அகில இலங்கை தபால் தந்தி ஊழியர்கள் சங்கம் மற்றும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கங்கள் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி – ஜேர்மன் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை...

பொதுத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 246 சுயேட்சைக் குழுக்கள்

பொதுத் தேர்தலை முன்னிட்டு 246 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள்...

படப்பிடிப்பு ஆரம்பம் – மலையக ரயில் சேவை மட்டு

கொழும்பிலிருந்து பதுளை வரை இடம்பெறும் மலையக ரயில் சேவை இன்று முதல் எல்ல ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத்...