follow the truth

follow the truth

November, 27, 2024
Homeஉள்நாடு"ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு சிலர் மனநலம் குன்றியவர்கள்"-நளின் பண்டார 

“ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு சிலர் மனநலம் குன்றியவர்கள்”-நளின் பண்டார 

Published on

ஜனாதிபதியுடன் இருக்கும் ஒரு சில மனநலம் குன்றியவர்களின் ஆலோசனைகள் காரணமாக, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை உள்ளதாகவும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் அதற்கு தற்போதைய அரசாங்கமே முழுயான பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

சரியான விவசாய ஆலோசனைகளை வழங்க முடியாதவர்களே ஜனாதிபதியுடன் உள்ளனர். சேதன பசளை பாவனைக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்பட்ட முறையே தவறானது என்கிறோம்.

தற்போது அவர்கள் இது தொடர்பில் பிறப்பித்த வர்த்தமானி முன்பு போல் வாபஸ் பெறபட்டுள்ளது. எனினும் பெரும்போகச் செய்கை தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் நெல் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் பூச்சியமாக மாறும்.

தேயிலை உற்பத்தியும் அவ்வாறுதான். எமது தேயிலை வெளிநாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எனவே இவர்களின் செயற்பாடுகளால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தற்போதைய அரசாங்கம் வெடித்து சிதறும் என்பதே உண்மை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

களனி மற்றும் கலா ஓயாவை சுற்றி வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கை மற்றும் கலா ஓயா பள்ளத்தாக்கு பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலா...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு வண்டி – மாயமான 8 பேரையும் மீட்கும் பணிகள் தொடர்கிறது

அம்பாறை - காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ளத்தில் கலப்பை அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 6 சிறுவர்கள்...

ஓமந்தை பகுதியில் வௌ்ளம்- சாரதிகளுக்கான அறிவித்தல்

யாழ்ப்பாணம் செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, குறித்த வீதியைப்...