ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர்கள் உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் செய்தி ஒன்றை வெளியிட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களைப் பாதுகாப்பதைத் தவிர்க்குமாறு லெபனான் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.
இல்லை என்றால் லெபனான் மற்றொரு காசா பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது என அங்கு மிரட்டல் விடுத்திருந்தார்.
லெபனானுக்கு மேலும் தரைப்படைகள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஹிஸ்புல்லாஹ்வின் அடுத்த தலைவர் என்று கூறப்பட்ட ஹாசிம் ஷஃபைதீன் கொல்லப்பட்டதாக பிரதமர் நெதன்யாகு கூறுகிறார்.
எனினும் இதனை ஹிஸ்புல்லாஹ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.