எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் வரையிலான தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசியப்பட்டியல் வேட்பாளர்களும் தமது வேட்புமனுக்களுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்க வேண்டுமென ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தமது வேட்புமனுக்களுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்கத் தவறுகின்றமை தண்டனைக்குரிய குற்றமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.