follow the truth

follow the truth

November, 23, 2024
HomeTOP2"அவள் பிறக்காமலே இருந்திருக்கலாம்.." - காசா அவலம்

“அவள் பிறக்காமலே இருந்திருக்கலாம்..” – காசா அவலம்

Published on

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 41,500 பேர் உயிரிழந்துள்ளனர். 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வருடம் இதே நாளில் [அக்டொபர் 7] ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்க இஸ்ரேல் போரைத் தீவிரப்படுத்தியது.

ஆனால் இந்த போரில் உயிரிழந்த பலஸ்தீனியர்களின் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். காசாவில் வாழ்ந்த சுமார் 23 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மனித உரிமை உதவிகள் எட்டாத துண்டிக்கப்பட்ட பிரதேசமாகக் காசா திகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் வீசும் குண்டுகளை விட உணவுத் தட்டுப்பாடும் சுகாதார சீர்கேடுமே அம்மக்களின் கொடுங்கனவாக மாறியுள்ளது. கை, கால்களை இழந்த சிறுவர் சிறுமியரின் புகைபடங்கள் காண்போர் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன

குழந்தைகள், கர்ப்பிணிகள் மருத்தவ உதவிகள் கிடைக்காமலும், பட்டினியால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் அவதிப்பட்டு வருகிறனர். இந்த அசாதார சூழ்நிலையில் குழந்தையை பிரசவிக்கும் தாய்மார்கள் நிர்கதியில் விடப்பட்டுள்ளனர்.

சொந்த நாட்டில் அகதியாக மத்திய காசாவில் Deir al-Balah பகுதியில் டென்ட் முகாம் ஒன்றில் கையில் தனது ஒருமாத பெண்குழந்தை குழந்தை மிலானாவை (Milana) ஏந்தியவாறு பேசும் ராணா சாலா (Rana Salah) என்ற தாய், இவளை (குழந்தையை) இந்த போருக்கும், துன்பத்துக்கு மத்தியில் பெற்றது என்னை குற்றவுணர்வில் தள்ளியுள்ளது. முடிவெடுக்கும் உரிமை எனக்கு இருந்திருந்தால் நான் இவளை பெற்றிருக்கவே மாட்டேன்.

இதற்கு முன் நாங்கள் இது போன்றதொரு அவலம் நிறைந்த வாழ்க்கையைக் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை . நான் இந்த குழந்தைக்கு துரோகம் செய்வதாகவே உணர்கிறேன். இதை விட மேம்பட்ட சூழலில் இவள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சாலா வாழும் இதே டெய்ர் பகுதியில் மருத்துவமனை அருகில் இடம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்த மசூதி மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியது.

அதில் 26 பேர் உயிரிழந்தனர். 93 பேர் படுகாயமடைந்தனர். ஐநா குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் (UNICEF) அறிக்கைத் தரவுகளில் படி சாலாவின் குழந்தை மிலானா காசாவில் கடந்த ஒரு வருடத்தில் போருக்கு மத்தியில் பிறந்து அவதிப்படும் 20,000 குழந்தைகளில் ஒருவள் ஆவாள்.

கணவனை இழந்து தனியே குழந்தையை தூக்கிக்கொண்டு குண்டுகளுக்கு பயந்து முகாம்களுக்கு முகாம் இடம்மாறி வரும் தாய்மார்கள் காசாவின் துயரத்துக்கு சாட்சிகளாக உள்ளனர். தற்கொலை எப்படி எதற்கும் தீர்வாக இருக்காதோ அதுபோல போர்களும் எதற்கும் தீர்வு கிடையாது என்பதை ஆயுதங்களை கொண்டாடும், வியாபாரம் செய்யும் மரண வியாபாரிகள் மக்களிடம் இருந்து மறைத்து வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால்...

சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை ஸ்ரீலங்கா...

மாதிவேல வீட்டுத் தொகுதியில் 35க்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள் வீடு கோரி விண்ணப்பம்

இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 35க்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான...