இந்நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களுக்காக உலக வங்கியுடன் 200 மில்லியன் டொலர் பெறுமதியான மேலதிக ஒப்பந்தம் இன்று (07) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில், நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் ஆகியோர் இது தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.