follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுஎரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

Published on

கண்டியில் சமையல் எரிவாயு வெடித்தமையினால் காயங்களுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய 10 கோடி ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாவார். மாத்தளை வில்கமுவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், தனது பிள்ளைகளின் மேலதிக கல்விக்காக குண்டசாலை பிரதேசத்திற்கு வந்து தற்காலிகமாக தங்கியிருந்த நிலையில், எரிவாயு வெடித்து தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் அல்லது எவ்வித பொறுப்புவாய்ந்த நிறுவனங்களும் தேடி பார்க்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...